பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு ஆய்வு

பொன்னமராவதி அருகே பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்புப் பணியை

பொன்னமராவதி அருகே பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்புப் பணியை புதன்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலத்தானியம், ஜெ.ஜெ. நகர், காமராஜ்நகர், கட்டையாண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆசிரியர் பயிற்றுநர்கள் அன்பழகன், பரிசுத்தம், பச்சைமுத்து, மதனகுமார், அழகுராஜா, சக்திவேல்பாண்டி, சரவணன், ரஹிமாபானு ஆகியோர் இக்கணக்கெடுப்பை மேற்கொண்டனர். இப்பணியை மாவட்ட பள்ளி செல்லா குழந்தைகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன், உள்ளடங்கிய கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் பார்வையிட்டனர். 
கட்டுமானப் பணி நடைபெறும் இடங்கள், செங்கல்சூளை, அரிசிஆலை, கல்குவாரி, மணல் குவாரி,பேருந்து நிலையம், உணவகங்கள் ஆகிய இடங்களில் கணக்கெடுப்பு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com