சாலை விபத்தில் முதியவர் பலி
By DIN | Published on : 17th May 2019 08:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
விராலிமலை அருகே வியாழக்கிழமை மிதிவண்டி மீது லாரி மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விராலிமலை ஒன்றியம், காளப்பனூர் அரசகுடிபட்டியைச் சேர்ந்த அப்பாச்சி கோனார் மகன் தங்கராஜ்(65). இவர் கடந்த வியாழக்கிழமை தனது மிதிவண்டியில் விராலிமலை - மதுரை நான்கு வழிச்சாலையில் விராலூர் பிரிவு சாலை அருகே சென்றபோது மதுரையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற லாரி தங்கராஜ் மீது மோதியுள்ளது. இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த விராலிமலை போலீஸார் நிகழ்விடம் சென்று சடலத்தை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலீஸார் வழக்கு பதிந்து லாரி ஓட்டுநர் உதயகுமாரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.