சுடச்சுட

    

    கந்தர்வகோட்டை அடுத்துள்ள ஆதனக்கோட்டை காவல் சரகத்தைச் சேர்ந்த குப்பையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரக்கவுண்டர் மனைவி சிட்டுப்பிள்ளை(80). இவர்   குப்பையன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே 
    ஆலங்குடி, ஆதனக்கோட்டை சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சிட்டுப்பிள்ளை மீது மோதியது . இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து ஆதனக்கோட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai