முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
அன்னவாசலில் உலக ரத்த அழுத்த தினம்
By DIN | Published On : 18th May 2019 09:16 AM | Last Updated : 18th May 2019 09:16 AM | அ+அ அ- |

அன்னவாசல் அரசு மருத்துவமனையில் உலக ரத்த அழுத்த தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தலைமை மருத்துவ அலுவலர் மதியழகன் தலைமை வகித்து பேசுகையில், ரத்த அழுத்தத்திற்கான காரணம் அதற்குரிய சிகிச்சை முறை மற்றும் தடுப்பு முறைகள், கர்ப்பிணிகள் மாதந்தோறும் ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்வதன் அவசியம், பிரசவ காலத்தில் ரத்த அழுத்தம் இருந்தால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து விளக்கினார். மருத்துவர்கள் சையதுமுகமது, நிலோபர், காவேரி உள்ளிட்ட மருத்துவமனை பணியாளர்கள், உள்நோயாளிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.