முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
அரங்குளநாதர் கோயில் இரட்டைத் தேரோட்டம்
By DIN | Published On : 18th May 2019 09:16 AM | Last Updated : 18th May 2019 09:16 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை திருவரங்குளத்திலுள்ள ஸ்ரீ அரங்குளநாதர்- பெரியநாயகி அம்பாள் கோயிலின் வைகாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான இரட்டைத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவரங்குளம் அரங்குளநாதர்- பெரியநாயகி அம்பாள் கோயிலின் வைகாசிப் பெருந்திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மண்டபகப்படிதாரர்கள் சார்பில் தினமும் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது.
பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான இரட்டைத் தேரோட்டம் வானவேடிக்கை ழுழங்க, பாரம்பரிய கலாசார நடனங்களுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பெரிய தேரில் ஸ்ரீ அரங்குளநாதர் மற்றும் பெரியநாயகி அம்பாளும், சிறிய தேரில் பெரியநாயகி அம்பாளும் எழுந்தருளினர். இரட்டைத் தேர்களும் காலை 10.30 மணியளவில் புறப்பட்டு தெற்குவீதி, பிரதான சாலை வழியாக பகல் 12 மணிக்கு நிலையை வந்தடைந்தன. நிகழ்ச்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.