முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
மாங்காடு அரசுப் பள்ளிக்கு அருகே சேதமடைந்த நீர்தேக்க தொட்டியை அகற்ற வலியுறுத்தல்
By DIN | Published On : 18th May 2019 09:16 AM | Last Updated : 18th May 2019 09:16 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள மாங்காடு அரசு தொடக்கப்பள்ளிக்கு பக்கத்தில் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாங்காடு ஊராட்சி மனப்புஞ்சையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி அருகேயுள்ள மேல்நிலைநீர்தேக்க தொட்டி மிகவும் சேதமடைந்ததால் அதனருகில் புதிய நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், அரசுத் தொடக்கப்பள்ளி அருகே சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த நீர்தேக்க தொட்டி அகற்றப்படவில்லை.
அந்தத் தொட்டி அருகே சென்று ஆபத்தை உணராமல் பள்ளி மாணவர்களும், அப்பகுதி குழந்தைகளும் விளையாடி வருகின்றனர். அதனால் அந்தத் தொட்டியை அகற்ற வேண்டுமென கடந்த 2 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திறக்கும் முன்பே இந்தக் நீர்தேக்க தொட்டியை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.