முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
லட்சுமி நரசிம்ம ஜெயந்தியின் 100ஆம் ஆண்டு மகோத்சவம்
By DIN | Published On : 18th May 2019 09:19 AM | Last Updated : 18th May 2019 09:19 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை கீழ 3ஆம் வீதியிலுள்ள ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாகவத சுவாமி நாம சங்கீர்த்தன மண்டபத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஜெயந்தியின் 100ஆம் ஆண்டு மகோத்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.
முதல் நாளில் பிராண பிரதிஷ்டை, சிறப்பு அபிஷேகம், சிறப்பு பஜனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து வரும் 26ஆம் தேதி வரை 10 நாட்கள் மகோத்சவ நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மும்பை, கொல்கத்தா, தில்லி, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.