பொன்னமராவதியில் தேசிய டெங்கு தினம்
By DIN | Published On : 18th May 2019 09:17 AM | Last Updated : 18th May 2019 09:17 AM | அ+அ அ- |

பொன்னமராவதி பேரூராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது .பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான்சேட் தலைமை வகித்தார். பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராமராஜ், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோர் டெங்கு நோய் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினர். நிறைவாக பேரூராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் தேசிய டெங்கு தின உறுதிமொழியேற்றனர்.