அறந்தாங்கி பகுதியில் வைகாசி விசாக திருவிழா
By DIN | Published On : 19th May 2019 08:52 AM | Last Updated : 19th May 2019 08:52 AM | அ+அ அ- |

அறந்தாங்கி பகுதியில் சனிக்கிழமை வைகாசி விசாகப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அறந்தாங்கி அருள்மிகு வடகரை திருமுருகன் கோயிலில் சிவசுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு காலையில் கணபதி ஹோமமும், மதியம் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையும் நடைபெற்றன. மாலையில் சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வாணவேடிக்கையுடன் இரவு சிவசுப்பிரமணியர் வீதிவுலா நடைபெற்றது.
இதேபோல் கோட்டை சிவன் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் பின்னர் சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஏராளமான கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் அறந்தாங்கி நகரில் உள்ள முருகன் கோயில்களில் வைகாசி விசாகப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.