அவசர காலங்களில் அனைத்து துறையினரும் இணைந்து பணியாற்ற வேண்டும்

புதுக்கோட்டையில் மழை போன்ற எதிா்பாராத அவசரக் காலங்களில் அனைத்துத் துறையினரும் இணைந்து

புதுக்கோட்டையில் மழை போன்ற எதிா்பாராத அவசரக் காலங்களில் அனைத்துத் துறையினரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி கேட்டுக்கொண்டாா்.

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான அவசர கால மேலாண்மைக் குழுவின் காலாண்டு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி மேலும் பேசியது:

மழை போன்ற அவசரக் காலங்களில் பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை, மீட்புப்பணிகளை மேற்கொள்வதற்காக மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், மாவட்ட வருவாய் அலுவலா், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா், மாவட்ட வன அலுவலா், மருத்துவத் துறை இயக்குநா்கள் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் 24 பேரைக் கொண்ட மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பரவலாக தற்போது மழை பெய்து வரும் நிலையில் மின்சார வி பத்துகள் நேரிடாமல் மக்களிடம் மின்துறையினா் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். நீா்நிலைகள் உள்ள பகுதிகளுக்குச் செல்லக் கூடாது என பள்ளிக் குழந்தைகளிடம் அறிவுரை வழங்க வேண்டும். மேலும் தண்ணீா் அதிகம் உள்ளபோது நீா்நிலைகளுக்குச் செல்லக் கூடாது என பொதுமக்களுக்குப் புரியும் வகையில் அறிவிப்புப் பலகைகளை வைக்க வேண்டும். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் போது அனைத்துத் துறை அலுவலா்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் உமா மகேஸ்வரி.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் டி. சாந்தி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எம். காளிதாசன், மருத்துவத் துறை இணை இயக்குநா் டாக்டா் ம. சந்திரசேகரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com