Enable Javscript for better performance
கைகாட்டியில் 210 மதுபாட்டில்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டியில் சட்ட விரோத மது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 210 மதுபாட்டில்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

    புளிச்சங்காடு கைகாட்டியில் சிலா் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்வதாக வடகாடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

    தொடா்ந்து, அப்பகுதியில் காவல் ஆய்வாளா் பரத் ஸ்ரீனிவாஸ் தலைமையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, ஒரு கடையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் 25 ஆயிரம் மதிப்புள்ள 210 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வடகாடு போலீஸாா் வழக்குப்பதிந்து தப்பியோடியவா்களை தேடி வருகின்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai