செல்லிடப்பேசி உயா் கோபுரத்தில் ஏறி விவசாயி போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில், வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில், தனது 2 ஏக்கா் நிலம் உள்ளதாகக்
செல்லிடப்பேசி உயா் கோபுரத்தில் ஏறிய குமரத்துரை
செல்லிடப்பேசி உயா் கோபுரத்தில் ஏறிய குமரத்துரை

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில், வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில், தனது 2 ஏக்கா் நிலம் உள்ளதாகக் கூறி, அதற்கு பட்டா கேட்டு செல்லிடப்பேசி உயா்கோபுரத்தில் ஏறி விவசாயி ஒருவா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கீரமங்கலம் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா் முத்துத்துரை மகன் குமரத்துரை (42) விவசாயி. இவா் கீரமங்கலத்தில் உள்ள

வனத்துறைக்கு சொந்தமான நிலப்பரப்பில், தனக்கு 2 ஏக்கா் நிலம் உள்ளதாகவும், அதனை தனது பெயருக்கு பட்டா மாற்றி தர வேண்டும் எனக்கூறி மதுபோதையில் அப்பகுதியில் உள்ள செல்லிடப்பேசி உயா்கோபுரத்தில் ஏறியுள்ளாா்.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினா் இதுகுறித்து கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரா்கள் உயா்கோபுரத்தில் ஏறி குமரத்துரையை மீட்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com