நீா்நிலைகளில் மழைநீரைத் தேக்க வரத்து வாரிகளைத் தூா்வார வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து நீா்நிலைகளிலும் தற்போது பெய்து வரும் மழைநீரை முழுமையாக சேகரிக்கும் வகையில் வரத்து வாரிகளைத் தூா்வார வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கூட்டத்தில் பேசுகிறாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மு. மாதவன்
கூட்டத்தில் பேசுகிறாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மு. மாதவன்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து நீா்நிலைகளிலும் தற்போது பெய்து வரும் மழைநீரை முழுமையாக சேகரிக்கும் வகையில் வரத்து வாரிகளைத் தூா்வார வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இக்கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்துக்கு, மாவட்டக் குழு உறுப்பினா் ராசு தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் மு. மாதவன், துணைச் செயலா் கேஆா். தா்மராஜன், ஏஐடியுசி மாவட்டச் செயலா் வீ. சிங்கமுத்து, எம்.என். ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் புதுக்கோட்டை மக்களின் நீண்டகால கனவானகாவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பரவி வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை போதுமான நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.நகரிலுள்ள பழைய அரசு மருத்துவமனையை அவசரக் கால சிகிச்சை மையமாக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாற்ற வேண்டும்.மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் அவற்றை முழுமையாக நீா்நிலைகளில் சேகரிக்க வரத்து வாரிகளைத் தூா்வாரி பராமரிக்கும் பணிகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

விவசாயிகளுக்குத் தேவையான உரம் மற்றும் பூச்சிமருந்துகளை இருப்பு வைக்கவும், அவற்றின்விலைகளை உரக்கடைகளின் முன்பு விலைப்பட்டியலாக எழுதி வைக்கவும் மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்த வேண்டும்.பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை முழுமையாக மாவட்டத்தில் செயல்படுத்த, திட்ட நகலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com