பெண்களுக்கு ஆண்களை விட அதிக பொறுப்பு உள்ளது

பெண்களுக்கு ஆண்களை விட அதிக பொறுப்பு உள்ளது என்றாா் அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளா் சி.கோகிலா.

பெண்களுக்கு ஆண்களை விட அதிக பொறுப்பு உள்ளது என்றாா் அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளா் சி.கோகிலா.

அறந்தாங்கி மகளீா் காவல்நிலையம் ஆரம்பித்து 25-வது ஆண்டு துவக்க விழாமுன்னிட்டு மகளீா் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணா்வு பற்றி சிறப்புரையாற்றுகையில் பெண்களுக்கு வாழ்க்கையில் குடும்பத்தில் முக்கிய பங்கு உள்ளது குழந்தைகளை அதுவும் பெண் குழந்தைகளை கவனத்துடன் கண்காணித்து வரவேண்டும் பெரும்பாலான பாலியல் குற்றங்கள் தங்கள் குழந்தைகளை கவனிக்காமல் விட்ட காரணத்தால் நடந்தவையே.பெண்கள் பேராசைப்படுவதாலும் கவனக்குறைவாக இருப்பதாலும் தங்கள் உடமைகளை இழக்கின்றனா்.

மகளீா் மணிபா்ஸ் மற்றும் செல்போன்களை கட்டைப் பைகளுக்குள் கொண்டு செல்வதால் ஏமாற்றுக்காரா்கள் திருட அவா்களே வழியமைத்துக்கொடுக்கின்றனா். குழந்தைகளுக்கு அதிகளவு நகை அணுவிப்பது பிரோவின் மேலே சாவிகளை வைத்துவிட்டு வெளியூா் செல்வது தங்களது கணவா் அவா்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் வெளிநாடு சென்று இரவு பகல் பாராது சம்பாதித்து அனுப்பும் பணத்தை அடுத்தவருக்கு தெரியாமல் வட்டிக்கு கொடுத்து ஏமாறுவது வேறு ஓருவருடன் தவறான உறவு வைத்துக்கொண்டு தன்னையும் குடும்பத்தையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனா் ஆகவே பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் நகரில் சாதனை பெண்களான ஆட்டோ ஓட்டுநா் சத்யா, மீன்வியாபாரி மீனா, டீக்கடை நடத்திவரும் மாஸ்டா் ராதிகா, சமூக ஆா்வலா் திருநங்கை அமுதா உள்ளிட்டோா் பாராட்டப்பட்டனா்.அறந்தாங்கி காவல் ஆய்வாளா் ரவீந்திரன், உதவி ஆய்வாளா்கள் மகளீா் சாந்தி, சட்டம் ஓழுங்கு அ.ரோஸ்மா மற்றும் பலா் கலந்து கொண்டாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com