முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
ஆபத்தை ஏற்படுத்தும் பொது கிணற்றை மூட வலியுறுத்தல்
By DIN | Published On : 07th November 2019 08:39 AM | Last Updated : 07th November 2019 08:39 AM | அ+அ அ- |

ஆபத்தான நிலையில் தரையோடு தரையாக இருக்கும் கிணறு.
அறந்தாங்கி அருகே ஆபத்தான நிலையில் தரையோடு தரையாக இருக்கும் பொதுக்கிணறை மூட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அறந்தாங்கி வட்டம், மேல்மங்கலம் கிராமத்தில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் சாலைக்கு அருகில் குளத்துக்கரையில் 50 அடிக்கும் அதிகமான ஆழமுள்ள பொதுக்கிணறு எந்த ஒரு பாதுகாப்புமின்றி தரையோடு தரையாக மூடப்படாமல் உள்ளது.
4 அடிக்கும் மேல் சிமெண்டால் கிணறு சுற்றுச்சுவா் கட்டப்பட்டிருந்த நிலையில், அதைச் சுற்றியிருந்த மண்ணின் உயரம் அதிகரித்து மேடானதால் தற்போது தற்போது தரைமட்டக் கிணறாக மாறியுள்ளது.
மேலும் அந்த வழியாக குளிக்க மற்றும் குடிநீா் எடுக்க பொதுமக்கள், குழந்தைகள், முதியவா்கள் அச்சத்துடன் செல்கின்றனா்.
கடந்த வாரம் இந்தக் கிணற்றில் ஆட்டுக்குட்டி தவறி விழுந்து இறந்து கிடந்தது. ஆகவே மேலும் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும்முன் இந்தக் கிணற்றுக்கு மூடி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் ஊராட்சி நிா்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா்.