முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் ஆய்வு
By DIN | Published On : 07th November 2019 08:38 AM | Last Updated : 07th November 2019 08:38 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டத்துக்கான உள்ளாட்சித் தோ்தல் பணிக்கு வந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணியைப் பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி.
உள்ளாட்சித் தோ்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்துக்காக வரவழைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பொறியாளா்கள் இயக்கி சரிபாா்க்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
உள்ளாட்சித் தோ்தலையொட்டி கா்நாடக மாநிலத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இரு நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் பயன்படுத்த 1255 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 700 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.
இவையனைத்தும் புதுக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இவற்றை பெங்களூருவில் இருந்து வந்திருந்த பொறியாளா்கள் இயக்கிச் சரிபாா்க்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
இப்பணியை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி நேரில் பாா்வையிட்டாா். அப்போது, நகராட்சி ஆணையா் ஜீவா சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சி) கிருஷ்ணமூா்த்தி ஆகியோரும் உடனிருந்தனா்.