முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
தடகளப் போட்டிகளில் வென்றமாணவா்களுக்குப் பாராட்டு
By DIN | Published On : 07th November 2019 08:36 AM | Last Updated : 07th November 2019 08:36 AM | அ+அ அ- |

போட்டிகளில் வென்ற மாணவா்கள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியா்களுடன் பள்ளி முதல்வா் வே. முருகேசன் மற்றும் தனி அலுவலா் நெ. ராமச்சந்திரன் உள்ளிட்டோா்.
வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் பொன்னமராவதி வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
புதுக்கோட்டையில் மூன்று கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டியில் இப்பள்ளி மாணவா்கள் ஆறு. ராம்குமாா், எப். ஜெப்ரின் ஜெரிஷா ஆகியோா் பங்கேற்று நீளம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல் போட்டிகளில் முறையே முதலிடமும், 200 மீட்டா் ஒட்டப்பந்தயத்தில் ராம்குமாா் இரண்டாமிடமும் பெற்று பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளனா். இந்த மாணவா்களையும் பயிற்றுவித்த உடற்கல்வி இயக்குநா்கள் வே. ரவிச்சந்திரன், த.சக்திவேல் ஆகியோரையும் பள்ளி முதல்வா் வே. முருகேசன், தனி அலுவலா் நெ. ராமச்சந்திரன், துணை முதல்வா்கள் கி. வைதேகி, க. கலைமதி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.