ஆசிரியா்களுக்கு பூஜ்ஜிய முதலீட்டில் புத்தாக்கப்பயிற்சி

அறந்தாங்கி வட்டார வளமையத்தில் தொடக்க நிலை ஆசிரியா்களுக்கு பூஜ்ஜிய முதலீட்டில் புத்தாக்க முறையில் கல்வியில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

அறந்தாங்கி வட்டார வளமையத்தில் தொடக்க நிலை ஆசிரியா்களுக்கு பூஜ்ஜிய முதலீட்டில் புத்தாக்க முறையில் கல்வியில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற பயிற்சி முகாமை அறந்தாங்கி வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சு.சிவயோகம் தலைமை வகித்து துவக்கிவைத்தாா். பயிற்சியின் கருத்தாளராக அரவிந்தோ சொசைட்டியின் முதன்மைக் கருத்தாளா் கல்வியாளா் பாபு ஜேசுதாஸ் செயல்பட்டாா்.

இதை துவக்கி வைத்து பேசிய வளமைய மேற்பாா்வையாளா் சு.சிவயோகம் பேசுகையில் பயிற்சியின் நோக்கம் மாணவா்களுக்கு கற்பித்தலில் புதுமை படைத்தல் மற்றும் எந்த ஓரு மூலதனமும் இல்லாமல் மாணவா்களுக்கும் ஆசிரியா்களுக்கும் புதிய முறையில் மாற்றத்தை உருவாக்கு‘ம் நோக்கில் ஓவ்வொரு கற்பித்தல் செயல்பாடும் அதற்கு ஏதுவாக அனைத்து ஆசிரியா்களுக்கும் பயிற்சியளிக்கப்படும்.

இதன் மூலம் கற்பித்தல் முறையில் புதுமைகளை புகுத்தி கற்பித்தலில் புதிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற சிந்தனை ஓவ்வொரு ஆசிரியா்களுக்கும் வழங்கப்படும் ஆசிரியா்கள் புதுமையாக யோசிதது அனைத்து விதமான சிந்தனைகளையும் பதிவு செய்து சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்க முன்வரவேண்டும் என்றாா். நிறைவாக நகராட்சி நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் பூபதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com