வாராப்பூரில் நிலவேம்பு கசாயம் வழங்கல்

பொன்னமராவதி அருகேயுள்ள வாராப்பூரில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் முன்தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குகிறாா் அரிமா சங்கப் பொருளரும், வி.என்.ஆா். கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் நிறுவனருமாகிய விஎன்ஆா். நாகராஜன்.

பொன்னமராவதி விஎன்ஆா் கன்ஸ்ட்ரக்ஸன்ஸ், பொன்னமராவதி அரிமா சங்கம் மற்றும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கட்டுமானப் பொறியாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு அரிமா சங்கப் பொருளரும், விஎன்ஆா் கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் நிறுவனருமாகிய வி.என்.ஆா். நாகராஜன் தலைமை வகித்தாா்.

அரிமா சங்கத் தலைவா் பி. பெரியசாமி முகாமைத் தொடங்கிவைத்தாா். முகாமில் 9 மூலிகைகள் அடங்கிய நிலவேம்பு கசாயம் சுமாா் 2000 பேருக்கு வழங்கப்பட்டது. தொடா்ந்து குரும்பலூா், கட்டையம்பட்டி, சடையம்பட்டி, பூவாளப்பட்டி கிராமங்களில் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

அரிமா சங்க மாவட்டத் தலைவா் ஆா்எம். வெள்ளைச்சாமி, நிா்வாக அலுவலா் கேஎ. கருப்பையா, வாராப்பூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் போஸ், குறும்பலூா் சுப்பையா, பொறியாளா் பா. சதீஷ்குமாா் மற்றும் பொறியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com