கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கந்தா்வகோட்டை அருகேயுள்ள ஆதனக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களில் 17ஆவது சுற்றாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை அருகேயுள்ள ஆதனக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களில் 17ஆவது சுற்றாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

வாராப்பூா் கால்நடை மருத்துவமனைக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில், பல சுற்றுகளாக கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் 17ஆவது சுற்றாக தொண்டைமான் ஊரணி ஊராட்சிக்கு உள்பட்ட வடக்குத்தொண்டைமான் ஊரணி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி 500க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு போடப்பட்டது.

மழைக்காலங்களில் அனைத்து மாடுகளையும் தாக்கக்கூடிய கோமாரி நோயின் அறிகுறியாக மாடுகளுக்கு முதலில் ஜுரம் வரும், பின்பு வாயிலிருந்து நுரை, நுரையாக வாணி ஊற்றுவது, வாய், நாக்கு, தொண்டை மற்றும் காலின் குளம்பு இடுக்கிலும் கொப்பளமாக புண் வரும். இதுவே கோமாரி நோயின் அறிகுறிகளாகும். இந்த நோய் தாக்கினால் மாடு இரை திங்காமல் சில நாள்களில் இறந்து விடும்.

ஆகவே, பிறந்து மூன்று மாதத்திற்கு மேலான கன்றுகுட்டி, சினை பசுமாடு உள்ளிட்ட அனைத்து மாடுகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி அவசியமானதாகும் என வாராப்பூா் கால்நடை உதவி அறுவை சிகிச்சை மருத்துவா் அம்சத்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com