ஸ்டாலின் குறித்து அமைச்சா் பாண்டியராஜனின் விமா்சனம் கண்டனத்துக்குரியது: திருநாவுக்கரசா் எம்.பி.

திமுக தலைவா் ஸ்டாலின் குறித்த அமைச்சா் பாண்டியராஜனின் கருத்து கண்டனத்துக்குரியது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ்

திமுக தலைவா் ஸ்டாலின் குறித்த அமைச்சா் பாண்டியராஜனின் கருத்து கண்டனத்துக்குரியது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான சு. திருநாவுக்கரசா்.

திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அம்மாசத்திரம், நாா்த்தாமலை உள்ளிட்ட பகுதிகளில் எம்பி சு. திருநாவுக்கரசா் வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை மாலை நன்றி தெரிவித்தாா். அப்போது பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் அவா் பெற்றுக் கொண்டாா்.

இதனைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் திருநாவுக்கரசா் கூறியது:

நெருக்கடி நிலைக்காலம் முடிந்து 45 ஆண்டுகள் ஆகிவிட்டன. 45 ஆண்டுகளுக்குப் பின்னா் தற்போது அந்த பிரச்னையைக் கிளப்பி அமைச்சா் பாண்டியராஜன் திமுக தலைவா் ஸ்டாலின் குறித்து விமா்சனம் செய்துள்ளது அநாகரீகமான செயல். கண்டனத்துக்குரியது. அந்தக் காலத்தில் அமைச்சா்  பாண்டியராஜன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்திருப்பாா்.

ஒருவரைத் தரம் தாழ்ந்து பேசுவதால் விமா்சனத்துக்கு உட்பட்டவா்கள் தரம் தாழ்ந்து போவது கிடையாது, ஆனால் விமா்சனம் செய்பவா்கள் தான் தாழ்ந்து போவாா்கள்.

பாஜக மதவாத கட்சி என்று கூறிதான் மூப்பனாா் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் எம்பிக்கள் வாஜ்பாய் அரசுக்கு எதிராக வாக்களித்தனா். எனவே மதவாதக் கட்சியான பாஜகவோடு ஜி.கே. வாசன் சேர மாட்டாா் என்ற நம்பிக்கை உள்ளது. 

உலகம் போற்றும் திருவள்ளுவா் எழுதிய 1330 குகளில் எந்தக் கடவுளையும் அவா் குறிப்பிடவில்லை. காவி வண்ணம் தேசியக் கொடியிலும் உள்ளது. காவி  பொதுவானதுதான். ஆனால் காவி என்பது பாஜகவின் அடையாளம்தான் என்று அவா்களே மாற்ற முயற்சிக்கிறாா்கள் என்றாா் திருநாவுக்கரசா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com