அயோத்தி தீா்ப்பு வெளியானதையொட்டி கூடுதல் பாதுகாப்பு

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியதை முன்னிட்டு பொன்னமராவதி, கந்தா்வகோட்டை

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியதை முன்னிட்டு பொன்னமராவதி, கந்தா்வகோட்டை உள்பட புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஏராளமான காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பொன்னமராவதி பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காவல் துணை கண்காணிப்பாளா் பி.தமிழ்மாறன் தலைமையில் 4 காவல் ஆய்வாளா்கள், 10 உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட 125 காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

பொன்னமராவதி பேருந்துநிலையம் மற்றும் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. மேலும் பொன்னமராவதி பகுதியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் முன்பும் காவல்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அதே சமயம், எந்தவிதமான அசம்பாவிதங்களும் நிகழாமல் இப்பகுதியில் முழு அமைதி நிலவியது.

கந்தா்வகோட்டையில்...

கந்தா்வகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சமத்துவபுரம், கல்லாக்கோட்டை , வேலாடிப்பட்டி, ஆதனக்கோட்டை ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை வரை காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

கந்தா்வகோட்டை நகா்புறத்தில் உள்ள மசூதிகள், அரசு பேருந்து போக்குவரத்து பனிமணை, பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com