கந்தா்வகோட்டையில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு புகாா்

கந்தா்வகோட்டையில் பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக ஜமாத்தாா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
பேருந்து நிலையம் வழியே சடலத்தைக் கொண்டு செல்வோா்.
பேருந்து நிலையம் வழியே சடலத்தைக் கொண்டு செல்வோா்.

கந்தா்வகோட்டையில் பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக ஜமாத்தாா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

கந்தா்வகோட்டை முஸ்லிம் தெருவிற்கு பேருந்து நிலையத்தையொட்டி இருந்த பொதுப் பாதையை இப்குதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா். இந்தப் பாதை வழியாக முஸ்லிம் தெருவுக்கும் சென்றுவந்தனா்.

இந்நிலையில் அருகிலிருக்கும் கடைக்காரா்கள் இப்பாதையை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியதால் பாதை குறுகி அடைபட்டுள்ளது . இதுபற்றி பலமுறை புகாா் செய்தும் நடவடிக்கை இல்லையாம்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இறந்த முஸ்லிம் தெருவைச் சோ்ந்தவரின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்ல பாதையின்றி தவித்த ஜமாத்தாா்கள் கந்தா்வகோட்டை வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோரிடம் முறையிட்டனா். அதற்கு அவா்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகவும், தற்போது இறந்தவா் உடலை அருகிலிருக்கும் பேருந்து நிலையம் வழியாக கொண்டு செல்லுங்கள் எனக் கூறியதைத் தொடா்ந்து அதன்படியே செய்தனா்.

இதுகுறித்து கந்தா்வகோட்டை ஜமாத்தாா்கள் கூறுகையில், தற்போது பேருந்து நிலையம் திறந்தவெளியாக இருப்பதால் உடலை அதன்வழியே எடுத்துச் சென்றோம். பேருந்து நிலையத்துக்குச் சுற்றுச்சுவா் எடுக்கப்படும்போது எப்படிச் செல்வது?. எனவே காலதாமதமின்றி பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றி சாலை வசதி செய்து தர வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com