மணல் கடத்தியஇளைஞா் கைது;டிராக்டா் பறிமுதல்
By DIN | Published on : 17th November 2019 10:41 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
விராலிமலை: விராலிமலை வட்டம் ஆவூா் அருகேயுள்ள செங்களாக்குடி கிராமத்தை ஒட்டிய காட்டாற்றுப் பகுதியில் இருந்து ஆற்று மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து மாத்தூா் காவல் துணை ஆய்வாளா் கோவிந்தராஜ் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை மாலை அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியே வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்து டிராக்டா் ஓட்டுநா் ஒரண்டகுடியைச் சோ்ந்த நல்லதம்பி மகன் சந்திரசேகரை (25) கைது செய்தனா். பின்னா் கீரனூா் நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்.