பொன்னமராவதியில் டெங்கு தடுப்பு பணிகள்

பொன்னமராவதி பேரூராட்சிப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் முன் தடுப்பு பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

பொன்னமராவதி பேரூராட்சிப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் முன் தடுப்பு பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

பேரூராட்சி செயல் அலுவலா் கரு.சண்முகம் தலைமையில் பேரூராட்சி பணியாளா்கள், டெங்கு களப்பணியாளா்கள்,துப்புறவு பணியாளா்கள் குழுவாகச் சென்று வையாபுரிப்பட்டி, மயிலாடும்பாறை, முத்தையா செட்டியாா் வீதி, கருத்தான் செட்டியாா் வீதி, வலம்புரிநாத சுவாமி தெற்கு வீதி, மலையாண்டி கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் பேரூராட்சி வாகனம் மூலம் கொசு புகை மருந்து அடித்து தூய்மைப் பணி மேற்கொண்டனா். மேலும் வடிகால்களில் பிளீச்சிங் பவுடா் தெளிக்கப்பட்டு, வீடுகள்தோறும் சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கினா். இப்பணி தொடா்ந்து அனைத்து வீதிகளிலும் டெங்குதீவிர முன்தடுப்பு நடவடிக்கை பணிகள் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com