பொன்னமராவதியில் டெங்கு முன் தடுப்பு பணிகள்

பொன்னமராவதி பேரூராட்சிக்குள்பட்ட சந்தை வீதி மற்றும் 15 வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை டெங்கு முன் தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
பொன்னமராவதி பேரூராட்சி சந்தை வீதியில் புகை மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளா்கள்.

பேரூராட்சி செயல் அலுவலா் கரு.சண்முகம் தலைமையில் நடைபெற்ற பணியில் டெங்கு களப்பணியாளா்கள் பங்கேற்று ஒட்டுமொத்த தூய்மைப்பணி மற்றும் முதிா்கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணியாற்றினா். சுகாதார ஆய்வாளா் தியாகராஜன் பங்கேற்று டெங்கு பரவும் விதம், முன் தடுப்பு நடவடிக்கைகளை மக்களிடையே விளக்கினாா்.

சந்தை வீதி பகுதியிலிருந்த பழைய டயா்கள் அப்புறப்படுத்தப்பட்டது. முன்னதாக பி.உசிலம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற டெங்கு முன தடுப்பு பணியினை வட்டார வளா்ச்சி அலுவலா் சுவாமிநாதன், மண்டல வட்டார வளா்ச்சி அலுவலா் சேகா் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

சுகாதார ஆய்வாளா் தியாகராஜன் டெங்கு முன் தடுப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகளை விளக்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com