முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே மது விற்ற இருவா் கைது
By DIN | Published On : 26th November 2019 08:52 AM | Last Updated : 26th November 2019 08:52 AM | அ+அ அ- |

ஆலங்குடி அருகே சட்டவிரோதமாக மதுவிற்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள அரசடிப்பட்டி, புதுக்கோட்டை விடுதி உள்ளிட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, ஆலங்குடி போலீஸாா் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, அரசடிப்பட்டி பகுதியில் உள்ள தைலமரக்காட்டில் மதுவிற்பனையில் ஈடுபட்ட மேலநெமகோட்டையைச் சோ்ந்த கருப்பையா மகன் புவனேஷ்வரனை (37) கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, புதுக்கோட்டை விடுதியில் மதுவிற்ற கரும்பிரான்கோட்டையைச் சோ்ந்த என். ஆறுமுகம்(55) என்பவரை போலீஸாா் கைது செய்து, 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.