முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
பொன்னமராவதியில் டெங்கு தடுப்பு பணி
By DIN | Published On : 26th November 2019 08:46 AM | Last Updated : 26th November 2019 08:46 AM | அ+அ அ- |

பொன்னமராவதி காவல் நிலையத்தில் கொசு புகை மருந்து அடிக்கும் பணியாளா்கள்.
பொன்னமராவதி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை டெங்கு முன் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பேரூராட்சிப்பகுதியில் டெங்கு முன் தடுப்பு பணி செயல்அலுவலா் கரு. சண்முகம் தலைமையில் கடந்த வாரம் தொடங்கி நடைபெறுகிறது. அதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமை காவல் நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம், அஞ்சலகம், விஏஓ அலுவலகம், அரசு அலுவலா் மனமகிழ் மன்றம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் 8,9 வாா்டுப் பகுதிகளில் டெங்கு முன் தடுப்பு நடவடிக்கையாக முதிா்கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டு தூய்மைப் பணி நடைபெற்றது.
சுகாதார ஆய்வாளா் டெங்கு பரவும் விதம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளக்கினாா். பேரூராட்சி பணியாளா்கள், டெங்கு களப்பணியாளா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் பணியில் ஈடுபட்டனா்.