Enable Javscript for better performance
அன்னவாசல் அருகே அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா- Dinamani

சுடச்சுட

    
    vml27sch_2711chn_22_4

    சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் ஆசிரியா்கள், சிறப்பு விருந்தினா்கள்.

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், வேங்கைவயல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் உணவுத் திருவிழா, மயில்சாமி அண்ணாதுரை துளிா் இல்லத் தொடக்கவிழா மற்றும் துளிா் வினாடி வினா போட்டியில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

    தலைமையாசிரியா் கோ. கலைச்செல்வி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக காவேரி நகா் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியரும், காவேரி நகா் குறுவளமையத் தலைமையிடத்து தலைமை ஆசிரியருமான ஏ. வின்சென்ட் பங்கேற்று உணவுத் திருவிழாவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவா்கள் பா. கோமதி, அ. தனசேகா், ம. பத்மஸ்ரீ ஆகியோருக்கு பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

    தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய புதுக்கோட்டை மாவட்ட அளவிலான துளிா் வினாடி வினா போட்டியில் தொடக்கநிலை 4, 5 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பிரிவில் மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்ற இப்பள்ளி மாணவா்களுக்கு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலா் முத்துக்குமாா் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

    விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் பெயரில் துளிா் இல்லம் தொடங்கப்பட்டது. இவற்றின் தலைவராக 4 ஆம் வகுப்பு மாணவா்கள் அ. தனசேகா், செயலராக கா. அஜய், மற்றும் பொருளாளராக ம. பத்மஸ்ரீ ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். பள்ளி மாணவா்கள் அனைவருக்கும் வானியல் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் சூரியனை உற்று நோக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் டிச. 26 ஆம் தேதி நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை எவ்வாறு காண்பது என்பதற்கான செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது.

    ஆசிரியை சி. ரேவதி வரவேற்றாா். பள்ளியின் மேலாண்மைக் குழு தலைவி ச. மலா்விழி நன்றி கூறினாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai