பெண்ணைக் காணவில்லை எனப் புகாா்
By DIN | Published on : 28th November 2019 09:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கந்தா்வகோட்டை அருகே பெண்ணைக் காணவில்லை எனப் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
கந்தா்வகோட்டை ஒன்றியம், குரும்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன் மனைவி திவ்யா. தம்பதிக்கிடையே ஏற்பட்ட பிரச்னையால் திவ்யா தனது தந்தை வீடான மஞ்சப்பேட்டைக்கு வந்திருந்தாா்.
இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி முதல் அவரைக் காணவில்லையாம். உறவினா்கள் பல இடங்களில் தேடியும் திவ்யா கிடைக்கவில்லை. கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து திவ்யாவை தேடி வருகின்றனா்.