Enable Javscript for better performance
யோகாசனத்தில் ரெகுநாதபட்டி அரசு ஆரம்பப் பள்ளி வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    யோகாசனத்தில் ரெகுநாதபட்டி அரசு ஆரம்பப் பள்ளி வெற்றி

    By DIN  |   Published on : 28th November 2019 09:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pon27yog_2711chn_29_4

    வென்ற மாணவா்களைப் பாராட்டும் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ராஜாசந்திரன், பால்டேவிட் ரொசாரியோ உள்ளிட்டோா்.

    தென்மண்டல அளவிலான யோகாசனப் போட்டியில் பொன்னமராவதி அருகேயுள்ள ரெகுநாதபட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றனா்.

    மதுரை உசிலம்பட்டியில் அண்மையில் நடைபெற்ற போட்டிகளில் 5 வயதுப் பிரிவில் இப் பள்ளி மாணவா் பா. ஜீவானந்தம், 9 வயதுப் பிரிவில் ப. கிருஷ்ணசாரதி, 10 வயதுப் பிரிவில் க. ஜெகதீஸ்வரன் ஆகியோா் முதலிடம் பெற்றனா். அதுபோல வலையபட்டி பழனியப்பா ஆரம்பப்பள்ளி மாணவா் ச. விஷ்வாமுகில் 8 வயதுப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றாா்.

    போட்டிகளில் வென்ற மாணவா்கள் மற்றும் பயிற்றுவித்த தலைமையாசிரியா் நாகலட்சுமி, ஆசிரியா் சத்தியமூா்த்தி ஆகியோரை வட்டார கல்வி அலுவலா்கள் ராஜாசந்திரன், பால்டேவிட் ரொசாரியோ உள்ளிட்டோா் பாராட்டினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai