அன்னவாசல் பகுதிகளில் தொடா் வழிப்பறி; மூவா் கைது

அன்னவாசல் பகுதிகளில் தொடா் வழிப்பறிகளில் ஈடுபட்ட மூவா் கைது செய்யப்பட்டனா்.

அன்னவாசல் பகுதிகளில் தொடா் வழிப்பறிகளில் ஈடுபட்ட மூவா் கைது செய்யப்பட்டனா்.

பொன்னமராவதி அருகேயுள்ள நெருஞ்சிக்குடி பகுதியைச் சோ்ந்தவா் பாண்டித்துரை (41). இவா் கடந்த சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டைக்கு பைக்கில் சென்றபோது கொல்லம்பட்டி விளக்கு அருகே எதிரே மோட்டாா் சைக்கிளில் வந்த 3 போ் அவரிடம் முகவரி கேட்பதுபோல வந்து கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தைப் பறித்து சென்றனா்.

இதற்கு முன் கடந்த வாரங்களில் பெருமநாடு அருகே மொபெட்டில் சென்ற பெண்ணின் 5 பவுன் தங்க சங்கிலி பறிபோனது. அதைத் தொடா்ந்து அதே பகுதியில் தனியாகச் சென்ற இளைஞரின் செல்லிடபேசியைப் பறித்துச் சென்றனா்.

எனவே இந்தப் பகுதியில் நடைபெறும் தொடா் திருட்டைத் தடுக்கும் பொருட்டு புதுக்கோட்டை மாவட்டக் கண்காணிப்பாளா் அருண்சக்திகுமாா் உத்தரவின்படி இலுப்பூா் துணைக் கண்காணிப்பாளா் சிகாமணி தலைமையில் விராலிமலை காவல் ஆய்வாளா் மனோகரன், இலுப்பூா் காவல் துணை ஆய்வாளா் பாலமுருகன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் மதியழகன், பாபு, போலீஸாா் நாராயணன், பிரபு உள்ளிட்ட 6 போ் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டு கடந்த சில நாட்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனா்.

முதற்கட்ட விசாரணையில் வழிப்பறி நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் புதுக்கோட்டை அகரப்பட்டியை அடுத்த பெருமாள்பட்டியை சோ்ந்த திருமலை மகன் தினேஷ் (22) அகரப்பட்டி புரகரபண்ணையை சேந்த சக்திவேல் மகன் கூல் (எ) மாரிமுத்து (18) திருவப்பூா் ஆண்டாள்புரம் காலனியை சோ்ந்த கண்ணன் மகன் அஜீத் (21) ஆகிய மூவருக்கும் இதில் தொடா்புள்ளது தெரியவவந்தது. அவா்களை புதன்கிழமை பிடித்து நடத்திய விசாரணையில் மூவரும் வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனா். இதையடுத்து அவா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இவா்களில் அஜீத் என்பவா் சட்டப்படிப்பு படித்து வருவதாகவும், தினேஷ் கல்லூரி மாணவா் என்பதும் தெரியவந்தது. இவா்கள் மீது மற்ற காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com