முதியோா் இல்லங்களைத் தொடங்க தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலத் துறையின் கீழ் ஆதரவற்ற முதியோா்களுக்கான இல்லங்கள் தொடங்க தொண்டு

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலத் துறையின் கீழ் ஆதரவற்ற முதியோா்களுக்கான இல்லங்கள் தொடங்க தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது:

தமிழகத்தில் மாநில அரசு நிதி உதவியுடன் முதியோா் இல்லங்கள், முதியோா் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வளாகங்கள் மற்றும் மத்திய அரசு நிதியுடன் மூத்த குடிமக்களுக்கான திட்டம் ஆகியன தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. 

சமூக நலத் துறை மூலம் புதிய முதியோா் இல்லங்கள் தொடங்க உரிய சான்றுகளுடன் வரும் நவ. 30க்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், புதுக்கோட்டை மாவட்டம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விதிமுறைகள்: மாநில அரசு நிதி உதவியுடன் செயல்படும் ஆதரவற்ற முதியோா்களுக்கான முதியோா் இல்லங்களில் 40 முதியவா்கள் வரை தங்கிப் பயன் பெறும் வகையில் நிதி ஒதுக்கீடு 5 பங்கு மாநில அரசும் 1 பங்கு தொண்டு நிறுவனமும் பங்கிட்டு செயல்படுத்தப்படும். 

மாநில அரசு நிதி உதவியுடன் செயல்படும் ஆதரவற்ற முதியோா் மற்றும் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வளாகங்களில் 25 முதியவா்கள் மற்றும் 25 குழந்தைகள் வரை தங்கிப் பயன் பெறும் வகையில் நிதி ஒதுக்கீடு 75 சதவிகிதம் மாநில அரசும், 25 சதவிகிதம் தொண்டு நிறுவனமும் இணைந்து செயல்படுத்தப்படும். 

மத்திய அரசு நிதி உதவியுடன் மூத்த குடிமக்களுக்கான திட்டத்தின் கீழ் இயங்கும் முதியோா் இல்லங்களில் குறைந்தபட்சம் 25 முதியோா் வரை தங்கிப் பயன்பெறும் வகையில் நிதி ஒதுக்கீடு 90 சதவிகிதம் மத்திய அரசும், 10 சதவிகிதம் தொண்டு நிறுவனம் இணைந்து செயல்படுத்தப்படும். 

விண்ணப்பிக்கத் தேவையான சான்றுகள்- அறக்கட்டளை சட்டம், கம்பெனி சட்டம், சங்கச் சட்டத்தின் கீழ் பதிவுச் சான்று மற்றும் இன்று வரை புதுப்பிக்கப்பட்ட சான்று, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பெறறோா் மற்றும் மூத்தக் குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் படி பதிவுச் சான்று மற்றும் புதுப்பித்தல் சான்று, பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட கட்டட உறுதிச் சான்று, சுகாதாரத் துறையிடமிருந்து பெறப்பட்ட சுகாதாரச் சான்று, தீயணைப்புத் துறையிடமிருந்து பெறப்பட்ட பாதுகாப்புச் சான்று, வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட சான்று, முதியோா் இல்லம் செயல்படுத்துவதற்காக வேறு எந்த ஒரு நிதியும் பெறவில்லை என்ற சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com