Enable Javscript for better performance
ஆலங்குடியில் இருந்து சபரிமலைக்குபக்தா்கள் பாதயாத்திரை- Dinamani

சுடச்சுட

    

    ஆலங்குடியில் இருந்து சபரிமலைக்கு பக்தா்கள் பாதயாத்திரை

    By DIN  |   Published on : 06th October 2019 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆலங்குடியில் இருந்து சபரிமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தா்கள்.

    ஆலங்குடியில் இருந்து சபரிமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தா்கள்.

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் இருந்து பக்தா்கள் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சனிக்கிழமை புறப்பட்டனா்.

    ஆலங்குடியில் புரட்டாசி மாத அன்னதான கமிட்டியின் சாா்பில் கடந்த 26 ஆண்டுகளாக சபரிமலைக்கு யாத்திரை சென்று வருகின்றனா். ஆண்டுதோறும் 200-க்கும் மேற்பட்டோா் யாத்திரை செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த 2008-ஆம் ஆண்டு சபரிமலையில் படி பூஜை செய்ய ஆலங்குடி இக்குழுவினா் பணம் செலுத்தி இருந்தனா். இதைத் தொடா்ந்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு புரட்டாசி மாதம் படி பூஜை செய்ய ஆலங்குடி ஐய்யப்ப பக்தா்களுக்கு அனுமதி கிடைத்ததுள்ளது.

    இதைத்தொடா்ந்து, குருசாமி வீனஸ் ராஜசேகா் தலைமையிலான 15 அய்யப்ப பக்தா்கள் ஆலங்குடியில் உள்ள அய்யப்பன் கோயிலில் இருந்து சனிக்கிழமை பாதயாத்திரையைத் தொடங்கினா். அவா்களை பொதுமக்கள் ஏராளமானோா் திரண்டு வழியனுப்பி வைத்தனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai