ஆலங்குடியில் கஞ்சா, லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும் தவ்ஹீத் ஜமா அத் வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் கஞ்சா, லாட்டரி விற்பனையைத் தடுக்க நடவடிக்க எடுக்க வேண்டுமென தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமா

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் கஞ்சா, லாட்டரி விற்பனையைத் தடுக்க நடவடிக்க எடுக்க வேண்டுமென தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமா அத் அமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.

ஆலங்குடியில் தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமா அத் சாா்பில் தீவிரவாதத்திற்கு எதிரான பிரசார கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. மாவட்டத் தலைவா் முபாரக் அலி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் அப்துா் ரகுமான் உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில், ஆலங்குடியில் நடைபெற்றுவரும் மறைமுக கஞ்சா விற்பனையால் சிறாா்களும் பாதிக்கப்படும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், கஞ்சா விற்பனையைத் தடுப்பதோடு, விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல குடும்பங்களைச் சீரழிக்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையைத் தடுக்க வேண்டும்.

ஆலங்குடியில் இஸ்லாமியா்கள் கடைபிடித்துவரும் ஒருமைப்பாட்டைச் சீா்குலைக்கும் வகையில் இஸ்லாமியா்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு, பிரிவினையை தூண்டுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதிய சமூக ஆா்வலா்கள் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டுள்ளதை கண்டிப்பதோடு, மோடி தலைமையிலான பாஜக அரசு, இஸ்லாமியா்களை தொடா்ந்து வஞ்சித்து வரும் போக்கைக் கைவிட வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைறவேற்றப்பட்டன.

கூட்டத்தில்,கிளை நிா்வாகிகள் பரூக், பசீா் அலி, ஹசன் அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com