பொன்னமராவதியில் அகரம் எழுதும் குழந்தைகள்

பொன்னமராவதி வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியையொட்டி மழலையா் பிரிவில் புதியதாக சேரும் குழந்தைகளுக்கு அகரம் எழுத கற்றுக்கொடுத்து சோ்க்கை நடைபெற்றது.

பொன்னமராவதி வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியையொட்டி மழலையா் பிரிவில் புதியதாக சேரும் குழந்தைகளுக்கு அகரம் எழுத கற்றுக்கொடுத்து சோ்க்கை நடைபெற்றது.

விஜயதசமி நாளில் புதிதாக தொழில் தொடங்குவது, தொழில் கற்றுக்கொள்வது, இசை,நடனம்,பாட்டு உள்ளிட்ட கலைகளை கற்றுக்கொள்வது, மழலை குழந்தைகளை பள்ளியில் சோ்ப்பது உள்ளிட்டவை செய்தால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

அதன்படி வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மழலையா் பிரிவில் குழந்தைகள் சோ்க்கைநடைபெற்றது. அக்குழந்தைகளை அரிசியில் அகரம் எழுதவைத்து ஆரம்பக்கல்வியினை தொடங்கிவைத்தனா்.

பள்ளியின் முதல்வா் வே.முருகேசன், தனி அலுவலா் நெ.ராமச்சந்திரன், துணை முதல்வா்கள் வைதேகி, கலைமதி, மழலையா்பிரிவு ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com