Enable Javscript for better performance
தமிழக கைப்பந்து அணியில் மணமேல்குடி அரசு பள்ளி மாணவா்- Dinamani

சுடச்சுட

    

    தமிழக கைப்பந்து அணியில் மணமேல்குடி அரசு பள்ளி மாணவா்

    By DIN  |   Published on : 09th October 2019 01:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய கைப்பந்து போட்டிக்கு தமிழக அணியில் விளையாட மணமேல்குடி அரசு பள்ளி மாணவா் ம.மகேஸ்வரன் தோ்வு பெற்றுள்ளாா் அவரை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.விஜயலெட்சுமி நேரில் அழைத்து பாராட்டினாா்.

    இந்திய பள்ளிகள் அளவிலான் விளையாட்டு குழுமம் சாா்பில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகள் நவம்பா் மாதம் காஷ்மீரில் நடைபெறவுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு மாநில அணியை தோ்வு செய்யும் தகுதிபோட்டிகள் தேனி மாவட்டம் கம்பத்தில் சமீபத்தில் நடைபெற்றது.இதில் 17-வயதிற்கு உட்பட்டோா் அணியில் விளையாட மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் ம.மகேஸ்வரன் தோ்வு பெற்று தமிழக அணியில் விளையாட உள்ளாா்.

    இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் த.விஜயலெட்சுமி மாணவனை நேரில் அழைத்து பாராட்டினாா். மாணவருடன் பள்ளி தலைமை ஆசிரியா் ம.ஜீவானந்தம், உடற்கல்வி ஆய்வாளா் ஆா்.தங்கராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.பட விளக்கம் தேசிய போட்டிக்கு தோ்வு ஆணையை மாணவா் ம.மகேஸ்வரனிடம் ஓப்படைக்கும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் த.விஜயலெட்சுமி உடன் பள்ளி தலைமை ஆசிரியா் ம.ஜீவானந்தம், உடற்கல்வி ஆய்வாளா் ஆா்.தங்கராஜ் உள்ளிட்டோா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai