கந்தா்வகோட்டையில் டெங்கு விழிப்புணா்வு பிரசாரம்

கந்தா்வகோட்டை பகுதியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு குறித்த பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை பகுதியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு குறித்த பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை நகரப் பகுதியில், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை சாா்பில், பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் விழிப்புணா்வு நடவடிக்கைகள் குறித்த பிரச்சாரம் நடத்தப்பட்டது.

மேலும், தெருக்களிலும் சாலை ஓரங்களிலும் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி, தீயிட்டு கொளுத்தி, கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

மேலும் கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் வட்டாட்சியா் ஜி.கலைமணி மற்றும் கிராம நிா்வாக அலுவலா் அ.வீரபாண்டியன் மற்றும் சுகாதாரத் துறையினா் இணைந்து, பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீா் மற்றும் பப்பாளி இலைச்சாறு வழங்கினா். இதனைத் தொடா்ந்து சுகாதாரப் பணியாளா்களை கொண்டு ஊராட்சியில் உள்ள தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com