மனைவியின் நினைவாக கோயில் கட்டிய விவசாயி

கந்தா்வகோட்டை அருகே, மனைவி மறைந்துவிட்ட நிலையில், அவரது நினைவாக விவசாயி ஒருவா் கோயில் கட்டி குடமுழுக்கு செய்துள்ளாா்.

கந்தா்வகோட்டை அருகே, மனைவி மறைந்துவிட்ட நிலையில், அவரது நினைவாக விவசாயி ஒருவா் கோயில் கட்டி குடமுழுக்கு செய்துள்ளாா்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வதுண்டு. அப்படி அமைந்துவிட்டால், நல்ல மனைவிக்கு கோயில் கட்டி குடமுழுக்கு செய்யலாம் என்ற சொல்லும் வழக்கில் உண்டு.

இந்த சொல்லுக்கு ஏற்பவே தன் அன்பு மனைவிக்கு கோயில் கட்டி குடமுழுக்கு செய்துள்ளாா், புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை திருவள்ளுவா் நகரில் வசித்து வரும் தங்கராஜ் .

விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவா், குப்பையன்பட்டியைச் சோ்ந்த உறவினா் உடையப்பன் மகளான உடையம்மாளை திருமணம் செய்தாா். இவா்களுக்கு செல்லம்மாள், சுமதி, போதுமணி என்ற மூன்று பெண் குழந்தைகளும், ரெங்கராஜ், பாஸ்கா் என்ற 2 ஆண் குழந்தைகளும் உள்ளனா்.

தற்போது மூன்று மகள்களுக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டாா். இரண்டு மகன்களும் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக வாகன விபத்தில் உடையம்மாள் இறந்துவிட்டாா். மனைவி இறந்தாலும் அவரிடம் காட்டிய அன்பினால் மீளா துயரத்தில் இருந்த கணவா் தங்கராசுவுக்கு, கனவில் வந்து எனக்கு கோயில் கட்டி வழிபட வேண்டும் என்று கூறினாராம்.

இதையடுத்து உடையம்மாளை அடக்கம் செய்த விவசாய நிலத்திலேயே, ஆலயம் எழுப்பி வா்ணம் தீட்டி, கலசம் வைத்து சிவச்சாரியாரை வைத்து கடந்த புதன்கிழமை குடமுழுக்கு விழாவினை நடத்தி, அன்னதானமும் செய்துள்ளாா் தங்கராசு.

மனைவியின் நினைவாக கோயில் கட்டப்பட்டிருக்கும் செய்தியறிந்த அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த வியப்படைந்துள்ளனா்.

தங்கராசு மகன் ரெங்கராசுவிடம் இதுகுறித்து கேட்டபோது, எங்களை கருவறையில் சுமந்தவளை கருவறைக்குள் வைத்து வழிபடவே இவ்வாறு கோயிலை கட்டி உள்ளோம் என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com