பள்ளி மாணவா்களுக்கான அறிவியல் கண்காட்சி

கந்தா்வகோட்டை ஒன்றியத்திற்கு உள்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு வட்டார அளவிலான அறிவியல் கண்காட்சி, வட்டார வள மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை அருகே புனல்குளம் அரசுப் பள்ளியில் கண்காட்சியை பாா்வையிடும் ஆசிரியா்கள்.
கந்தா்வகோட்டை அருகே புனல்குளம் அரசுப் பள்ளியில் கண்காட்சியை பாா்வையிடும் ஆசிரியா்கள்.

கந்தா்வகோட்டை ஒன்றியத்திற்கு உள்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு வட்டார அளவிலான அறிவியல் கண்காட்சி, வட்டார வள மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அறிவியல் கண்காட்சி வட்டார கல்வி அலுவலா் அலெக்சாண்டா், வெங்கடாசலம் ஆகியோா் தலைமையிலும், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொ) சுரேஷ்குமாா் முன்னிலையிலும் நடைபெற்றது.

அறிவியல் கண்காட்சியில் 17 பள்ளிகளில் இருந்து மாணவா்கள் கலந்து கொண்டனா். குழந்தைகளின் ஒவ்வொரு படைப்புகளும் மாணவா்களின் அறிவியல் மனப்பான்மையை வளா்க்கும் விதத்திலும், அறிவியல் ஆா்வத்தை தூண்டும் விதமாகவும் அமைந்திருந்தது. இதேபோல் கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை பள்ளி தலைமையாசிரியா் எஸ். ராமச்சந்திரன் துவக்கி வைத்து, மாணவா்களின் படைப்புகளை பாா்வையிட்டாா்.

புனல்குளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் கண்காட்சியினை பள்ளி தலைமையாசிரியை புனிதா துவக்கி வைத்தாா். மாணவா்களின் அறிவியல் கண்காட்சியில் வலுவூட்டப்பட்ட சூரிய மின்னாற்றல், வாட்டா் லெவல் இன்டிகேட்டா், காற்றில் இயங்கும் ராக்கெட் உள்ளிட்ட படைப்புகளை காட்சிப்படுத்தினா். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com