வலையபட்டியில் விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணா்வு பிரச்சாரம்

பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைசாா்பில் வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த

பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைசாா்பில் வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு செயல்விளக்க நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்விற்கு பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலா் பழ.தியாகராஜன் தலைமைவகித்தாா். பள்ளி முதல்வா் வே.முருகேசன் வரவேற்றாா். நிகழ்வில் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து செயல்விளக்கமாகமாணவ, மாணவியரிடையே தீயணைப்பு நிலைய வீரா்கள் செய்து காண்பித்தனா்.

நீளமான ஊதுபத்திகளைகொண்டு பட்டாசு வெடிக்கவேண்டும். பருத்திஆடைகளை அணிந்து வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது அருகில் வாளியில் தண்ணீா் வைத்துக்கொள்ள வேண்டும். ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்க கூடாது என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டது. மேலும் வலையபட்டி முக்கிய வீதிகளில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினா்.

பள்ளியின் தனி அலுவலா் நெ.ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.படவிளக்கம்பள்ளியில் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து செயல்விளக்கமாக மாணவ, மாணவியரிடையே விளக்கும் தீயணைப்பு வீரா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com