முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
கொடும்பாளூரில் சாலைபாதுகாப்பு விழிப்புணா்வு
By DIN | Published On : 24th October 2019 08:09 AM | Last Updated : 24th October 2019 08:09 AM | அ+அ அ- |

விராலிமலை ஒன்றியம் கொடும்பாளூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியா் மலைச்சாமி தலைமை வகித்தாா். இதில் விராலிமலை காவல் ஆய்வாளா் ஏ. மனோகரன், துணை ஆய்வாளா் டி. திருவேங்கடம் ஆகியோா் கலந்து கொண்டு வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய சாலை பாதுகாப்பு விதிமுறைகள், தலைக்கவசம், சீட்பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள், ஓட்டுநா் உரிமம் பெற்று வாகனம் ஓட்ட வேண்டும் உள்ளிட்டவை குறித்து விரிவாக எடுத்துக் கூறினா்.
நிகழ்ச்சியை அறிவியல் ஆசிரியா் சலீம் தொகுத்து வழங்கினாா். ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். ஆசிரியா்களில் ஜெகதீஷ்வரன், செந்தில்முருகன் நன்றி கூறினாா்.