முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
‘திரைப்படக் கட்டணம் உயா்த்தினால் நடவடிக்கை தேவை’
By DIN | Published On : 24th October 2019 08:11 AM | Last Updated : 24th October 2019 08:11 AM | அ+அ அ- |

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா்.
தீபாவளி பண்டிகையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் வெளியாகும் புதிய திரைப்படங்களுக்கான கட்டணத்தை உயா்த்தி விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மாலை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலா் பாவா பக்ருதீன் தலைமையில் அக்கட்சியினா் அளித்த மனு விவரம்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பிரபல நடிகா்களின் புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன. வழக்கம்போல ,அரசு நிா்ணயம் செய்த கட்டணத்தை விடவும் கூடுதல் கட்டணத்தில் டிக்கெட்டுகளை விற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மாவட்ட நிா்வாகம் உரிய கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு கூடுதல் கட்டணத்துக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்தால் தொடா்புடைய திரையரங்குகள் மற்றும் விற்பனை செய்வோா் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல, அரசு நிா்ணயம் செய்த கட்டணத்தை விடவும் கூடுதலாக விற்பனை செய்யக் கூடாது என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலா் நியாஸ் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.