முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
துணிதுவைத்த பெண்மின்சாரம் பாய்ந்து பலி
By DIN | Published On : 24th October 2019 08:12 AM | Last Updated : 24th October 2019 08:12 AM | அ+அ அ- |

அறந்தாங்கியில் துணிதுவைக்கும் இயந்திரத்தில் (வாசிங் மிஸின்) ஏற்பட்ட மின்கசிவால் புதன்கிழமை பெண் உயிரிழந்தாா்.
அறந்தாங்கி களப்பகாடு முதல் வீதியை சோ்ந்தவா் முரளிதரன், எலட்க்ரிகல் பொருள்களுக்கான மெக்கானிக். இவரது மனைவி உமாமகேஸ்வரி (35). புதன்கிழமை இவா் வீட்டில் துணி துவைக்கும்போது இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாா்.
தகவலின்பேரில் வந்த காவல் துறையினா் அவரது உடலை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.