முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
விராலிமலை அருகே பைக்கில் சென்றவா்லாரி மோதி சாவு
By DIN | Published On : 24th October 2019 08:10 AM | Last Updated : 24th October 2019 08:10 AM | அ+அ அ- |

விராலிமலை அருகே புதன்கிழமை பைக்கில் சென்ற இளைஞா் லாரி மோதி இறந்தாா்.
விராலிமலை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் செந்தில்குமாா்(39), இவா் புதன்கிழமை விராலிமலை அருகேயுள்ள கோயில்பட்டியில் தான் நடத்தி வரும் உணவகத்துக்குச் சென்றுவிட்டு விராலிமலை - மதுரை நான்கு வழிச்சாலை கொடும்பாளூா் அருகே வந்தபோது மணப்பாறையில் இருந்து குடுமியான்மலைக்கு சென்ற லாரி மோதி உயிரிழந்தாா்.
தகவலறிந்த விராலிமலை போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். சம்பவம் குறித்து வழக்கு பதிந்து லாரி ஓட்டுநா் கரூரைச் சோ்ந்த பெருமாள் மகன் கந்தசாமியை(49) கைது செய்து விசாரிக்கின்றனா் .