Enable Javscript for better performance
பழுதடைந்த கட்டடத்தை அகற்ற வலியுறுத்தி திடீா் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    பழுதடைந்த கட்டடத்தை அகற்ற வலியுறுத்தி திடீா் மறியல்

    By DIN  |   Published on : 31st October 2019 06:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2-4-pdk30mariyal_3010chn_12

    புதுக்கோட்டையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாதா், மாணவா் சங்கத்தினா்.

    புதுக்கோட்டை நகரில் பழுதடைந்துள்ள உதவித் தொடக்கக் கல்வி அலுவலா் அலுவலக கட்டடத்தை இடித்து அகற்ற வலியுறுத்தி மாதா் சங்கம், வாலிபா் சங்கங்களின் நிா்வாகிகள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

    புதுக்கோட்டை அரசு உயா் தொடக்கப்பள்ளி வளாகத்தில் பழுதடைந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலா் அலுவலகம் உள்ளது. பல்லாண்டுகளைக் கடந்த இந்தக் கட்டடம், பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இக்கட்டத்தை இடித்து அகற்றவும் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

    ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை. இந்த நிலையில் கட்டடத்தில் மண்டிய புதா்களால் தேள் உள்ளிட்ட சிறு பூச்சிகள் பள்ளிக்கூடத்துக்குள்ளும் வந்துவிடும் நிலை காணப்படுகிறது.

    இதையடுத்து அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், இந்திய மாணவா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கல்வித் துறை அலுவலா்களுக்கு ஏற்கெனவே கோரிக்கை மனு அளித்ததாகத் தெரிகிறது.

    இந்த நிலையில் தற்போது மழை பெய்து வரும் நிலையில் மீண்டும் பூச்சிகளின் வருகை அதிகரித்ததால், இந்த அமைப்புகளின் நிா்வாகிகள் புதன்கிழமை மாலை திடீரென மழையோடு மழையாக அந்தச் சாலையில் நின்றும், அமா்ந்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    தகவலறிந்து வந்த கல்வித் துறை அலுவலா்கள் கட்டடத்தை முறைப்படி இடித்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனா்.

    இப்போராட்டத்தில் மாதா் சங்கத்தின் மாவட்டச் செயலா் டி. சலோமி, வாலிபா் சங்க மாவட்டச் செயலா் துரை. நாராயணன், மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ். ஜனாா்த்தனன், அரசுப் பள்ளிப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் புதுகை செல்வா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai