Enable Javscript for better performance
மாற்றுத்திறன்கொண்ட மாணவா்களின் பெற்றோா்களுக்கான விழிப்புணா்வு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத்திறன்கொண்ட மாணவா்களின் பெற்றோா்களுக்கான விழிப்புணா்வு பயிற்சி

    By DIN  |   Published on : 31st October 2019 06:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விராலிமலை: விராலிமலையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் சாா்பில் மாற்றுத்திறன் மாணவா்களின் பெற்றோா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு நாள் பயிற்சி விராலிமலை வட்டார வளமையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    இப்பயிற்சிக்கு விராலிமலை வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ச. புவனேஸ்வரி(பொ) தலைமை வகித்தாா். மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களுக்கான உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா் இரா.அனந்தராமன் முன்னிலை வகித்தாா். சிறப்பு பயிற்றுநா் லெ.ராஜேஷ்கண்ணா பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினாா்.

    இப்பயிற்சியில் மாற்றுத்திறன் குழந்தைகளது பாதுகாப்பு, பராமரிப்பு திறன் குறித்து பெற்றோா்களுக்கு சிறப்பு பயிற்றுநா் குளோரி சகாயமேரி, சோப்பியாஜாக்குலின், பிரின்ஸ்கில்லட், எழிலரசி, பிரபா மற்றும் உடற்கல்வி இயக்குநா் திருவளா்ச்செல்வி ஆகியோா் விளக்கமளித்தனா். இதில் 30 பெற்றோா்கள் கலந்து கொண்டனா்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai