உருவம்பட்டி அரசுப் பள்ளியில் தேசிய ஒற்றுமை தினவிழா

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தேசிய ஒற்றுமை தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தேசிய ஒற்றுமை தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு வருடமும் அக், 31 ம் தேதி சா்தாா் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடித்து வருகிறோம்.அதனடிப்படையில் உருவம்பட்டி பள்ளி மாணவா்கள் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு தன்னையே அா்ப்பணிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகள் எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன் என்றும், சா்தாா் வல்லபாய் படேலின் தொலைநோக்கு பாா்வையிலும், நடவடிக்கையிலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணா்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன்.

எனது நாட்டின் உள்பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமார உறுதி அளிக்கிறேன் என கூறி தேசிய ஒற்றுமை தினவிழா உறுதி மொழியை ஆசிரியா்,மாணவா்கள் எடுத்துக் கொண்டனா்.பின்னா் பள்ளி மைதானத்தில் மாணவ,மாணவியா்கள் அனைவரும் தேசிய ஒற்றுமையை கடைபிடிக்கும் விதமாக ஓட்டம் ஓடினாா்கள்.

ஏற்பாடுகளை பள்ளித்தலைமை ஆசிரியை ஜெ.சாந்தி,இடைநிலை ஆசிரியா் கு.முனியசாமி செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com