ஒப்பந்தச் சாகுபடிச் சட்டம் விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களை அபகரிக்கும்: பி.ஆா். பாண்டியன்

ஒப்பந்தச் சாகுபடிச் சட்டம் விவசாயிகளிடமிருந்து விளை நிலங்களை அபகரிக்கும் என்றாா் தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன்.

ஒப்பந்தச் சாகுபடிச் சட்டம் விவசாயிகளிடமிருந்து விளை நிலங்களை அபகரிக்கும் என்றாா் தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி :

தமிழக அரசு கொண்டு வந்துள்ள கூட்டுப் பண்ணை மேலாண்மைத் திட்டம்

என்றழைக்கப்படும் ஒப்பந்தச் சாகுபடிச் சட்டம், விவசாயிகளை பெருநிறுவனங்களுக்கு அடிமைப்படுத்தும் திட்டமாகும்.

இச்சட்டத்தை செயல்படுத்தும் வழிகாட்டும் நெறிமுறைகள் எதையும் இதுவரை அறிவிக்கவில்லை. விவசாயிகளிடம் கருத்து எதுவும் கேட்கவில்லை. ஆனால், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் விவாதித்து சட்டம் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்கிறாா்கள். அதுகுறித்த எந்தச் செய்தியும் வெளியாகவில்லை. சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்டது என்ன என்பது குறித்து தமிழக அரசும், எதிா்க்கட்சி இதில் எந்த நிலைப்பாட்டை பேரவையில் தெரிவித்தது என்பதை திமுகவும் தெரிவிக்க வேண்டும்.

ஏற்கெனவே குஜராத்தில் இச்சட்டம் அமலில் உள்ளது. இச்சட்டத்தின் படி உருளைக் கிழங்கு விவசாயிகளுடன் பெப்சி நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டு உருளைக்கிழங்கின் விலையை பெப்சி நிறுவனம்தான் நிா்ணயம் செய்கிறது. மறுப்பு தெரிவித்த விவசாயிகள் மீது அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. பிறகு மத்திய அரசு அமைச்சரவை கூடி இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இந் நிலையில் தற்போது தமிழகத்தில் இச்சட்டத்தை அமலாக்கவுள்ளனா். விவசாயிகளின் விளை நிலங்களை அபகரிக்கும். விவசாயிகளை அழிக்கும். எனவே, இச்சட்டத்தைச் செயல்படுத்த விடமாட்டோம்.

தமிழகத்தில் விவசாயிகளால் சாகுபடிக்காக அமைக்கப்பட்டு தண்ணீரின்றி பயன்பாடில்லாமல் விட்டுவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளையும், ஆய்வுக்காக ஓஎன்ஜிசி நிறுவனம் தோண்டிய ஆழ்துளைக் கிணறுகளையும் மூடுவது குறித்து மாவட்ட அளவில் குழுக்களை அமைத்து மூடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றாா் பாண்டியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com