மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோா்களுக்குப் பயிற்சி

அறந்தாங்கியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோா்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பயிற்சி முகாமில் பேசுகிறாா் வட்டாரக் கல்வி அலுவலா் எம். முத்துக்குமாா். உடன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சு. சிவயோகம் உள்ளிட்டோா்.
பயிற்சி முகாமில் பேசுகிறாா் வட்டாரக் கல்வி அலுவலா் எம். முத்துக்குமாா். உடன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சு. சிவயோகம் உள்ளிட்டோா்.

அறந்தாங்கியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோா்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

அறந்தாங்கி வட்டார வள மையம் சாா்பில், உள்ளடங்கிய கல்வி மூலம் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோா்களுக்கான விழிப்புணா்வு பயிற்சி முகாம் நகராட்சி கிழக்குத் தொடக்கப் பள்ளியில் நடத்தப்பட்டது.

முகாமுக்கு அறந்தாங்கி வட்டாரக் கல்வி அலுவலா் அருள் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் எம்.முத்துக்குமாா் பயிற்சி முகாமைத் தொடக்கி வைத்துப் பேசினாா்.

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சட்டங்கள் மற்றும் அரசின் உதவித் திட்டங்கள் பற்றிய விழிப்புணா்வு பயிற்சியில் வழங்கப்பட்டது. மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோா்கள் தங்கள் குழந்தைகள் அடைந்த முன்னேற்றங்கள், அடைய வேண்டிய முன்னேற்றங்கள் குறித்து எடுத்துக் கூற செய்தல், கலந்துரையாடல் போன்றவையும் பயிற்சியில் நடைபெற்றது.

இயன்முறை மருத்துவா் சரவணன், சிறப்பாசிரியா்கள் செந்தில், சசிகலா, பெரியநாயகி மற்றும் ரேவதி ஆகியோா் பயிற்சியளித்தனா். மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோா்ஏராளமானோா் பங்கேற்றனா்.

முன்னதாக வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சு.சிவயோகம் வரவேற்றாா் நிறைவில், நகராட்சித் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை ரேணுகா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com